உலகம்

‘நான் சிங்கள பௌத்த தலைவர் ஒருவரே’ – இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ

“சுபீட்சமான எதிர்காலம் – சௌபாக்கியமான தாய் நாடு” என்ற தொனிப் பொருளில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று (04.02.2021) கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்ப – 7 இல் அமைந்துள் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றன.

இம்முறை கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை பேணி, சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இதன் போது ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேட்டுகளாக முப்படையினர் 21 வேட்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இதன் போது உரை நிகழ்த்திய இலங்கையின ஜனாதிபதி,
நாட்டில் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் உரிய இடத்தை வழங்கும், அகிம்சைவாத பௌத்த வழிகாட்டல்களின் கீழ், நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைவரும் சமமாக வாழும் உரிமை உண்டு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தான் சிங்கள பௌத்த தலைவர் ஒருவரே என்றும் அதனைக் கூற தான் ஒருபோதும் தயங்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதுடன், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலும் உடடினயாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஊழலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொவிட் வைரஸ் குறித்த தடுப்பூசி திட்டம் தொடரும் என்று மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மையங்களை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும், அதேவேளையில் இது தொடர்பான வதந்திகளை பரப்புபவர்களின் அடிப்படை நோக்கங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

Hot Topics

Related Articles