அரசின் தேசிய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு தனியார் சுகாதார ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு APHNH கோரிக்கை

தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை அரசாங்க வைத்தியசாலை சுகாதார அதிகாரிகளுக்கு மட்டுமன்றி தனியார் வைத்தியசாலை சுகாதார அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாதியர் இல்ல சங்கம் (APHNH) வேண்டுகொள் விடுத்துள்ளது.

மேலும் தனியார் சுகாதார ஊழியர்கள் அரசாங்கத்தின் தடுப்பூசி முன்னுரிமைக் கொள்கையில் இதுவரை உள்ளடக்கப்படவில்லையென சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இணைந்து தனியார் வைத்தியசாலை சுகாதார அதிகாரிகளும் முக்கிய பங்கினை வகித்துள்ளதனால் இதுகுறித்து மறு பரிசீலனை செய்யுமாறும் சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலுள்ள 50% சதவீத வெளிநோயாளர் மருத்துதுவ சேவைகளை மேற்கொள்வது தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாதியர் பிரிவுகளாகும். கொவிட்-19 தொற்றுநோயின் போது தனியார் துறை சுகாதார பிரிவினர் மேற்கொண்ட சேவைகள் மூலம் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுநோய் தீவிரமடைந்த காலக்கட்டத்தின் போது நோயாளர்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி தமது சேவைகளை சிறப்பாக மேற்கொண்டு அரசாங்கத்திற்கு தமது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனியார் சுகாதார அதிகாரிகள் களத்தில் முன்னணியிலுள்ள கதாநாயகர்கள், அவர்கள் அபாயகரமான வைரஸை வெற்றிகரமாக எதிர்கொள்கின்றனர். அரசாங்க ஊழியர்களைப் போலவே அவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

தொற்றுநோயைத் தடுப்பதற்காக அவர்களும் முன்னின்று செயற்பட்டு வருகிறார்கள். அதனால் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் போது அவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். எமது சங்கம் மற்றும் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (PHSRC) ஆகியன தனியார் சுகாதார ஊழியர்களும் தடுப்பூசி வழங்குவதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை தன்வசம் கொண்டுள்ளனர்.

கடந்த மாதங்களாக, எங்களது உறுப்பு மருத்துவமனைகள் மற்றும் முன்னணி சுகாதார ஊழியர்கள் நாட்டின் கொவிட்-19 தடுப்பு மற்றும் பராமரிப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

நாங்கள் PCR பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளோம், மேலும் அரசாங்கத்திடமிருந்து கொவிட்-19 கவனிப்பு சுமையை எளிதாக்க இடைநிலை பராமரிப்பு வசதிகளை மேற்கொண்டோம். இதனால் தான் அரசாங்க சுகாதார பிரிவினருடன் இணைத்து தனியார் பிரிவு சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.” என தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாதியர் பராமரிப்பு சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்கித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கோரிக்கையை முன்வைக்கும் போது, நாடு முழுவதிலும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு உதவ தனியார் சுகாதாரத் துறை தயாராக உள்ளதாக APHNH தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 01, 2021இல் இருந்து இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் 100,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கமும் எமது சுகாதாரப் பிரிவினரும் சிறந்த சேவையொன்றை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பிரிவினருக்கும் தடுப்பூசியை வழங்க அனுமதித்தவுடன் அதனை வெற்றிகரமாக மேற்கொண்டு அதனூடாக அரசாங்கத்திற்கு சிறந்த உதவிகளை வழங்குவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் பெருமளவில் தடுப்பூசிகள் வருமென எதிர்பார்த்துள்ளோம். தடுப்பூசி வழங்கும் சேவைக்கான தேவை அதிகமாகவுள்ளது என வலியுறுத்தியுள்ள டொக்டர் லக்கித் பீரிஸ் கொவிட்-19 தடுப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான தேசிய முயற்சிகளுக்கு தனியார் சுகாதாரப் பிரிவின் தொடர்ச்சியான ஆதரவு அவசியமாகும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles