உலகம்

தனது 100 ஆவது வயதில் சாதனை படைத்த கேப்டன் டாம் மூர் காலமானார்!

கொரோனா பேரிடர் காலத்தில்  நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை காணொளியாக வெளியிட்டதன் மூலம் 53 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெற்று சாதனை படைத்தவர் கேப்டன் டாம் மூர்.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான இவர் தனது 100 வயதில் செய்த சாதனை உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

தனியொரு நபராக சமூகத் தொண்டுக்காக அதிகூடிய நிதியை சேகரித்ததன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்தார்.

இந்த சாதனைக்காக பிரிட்டிஷ் மகாராணியால் உயர் சிவில் விருது (சேர்) வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.


கொரோனா தொற்று மற்றும் உடல்நலக் குறைவால் வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இவர் நேற்று காலமானார்.

இதனையடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத், அரச குடும்பத்தின் சார்பில் டாம் மூரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரங்கல் செய்தியில், டாம் மூர் ஒரு ஹீரோ. உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர் என தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலக முன்றலில் நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles