சீனாவில் போலி கொரோனா தடுப்பூசி தயாரிப்பு! வெளிநாடுகளுக்கு அனுப்பவும் திட்டமாம்

சீனாவில் போலி கொரோனா தடப்பூசிகளை தயாரிப்பில் ஈடுபட்ட 80 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள், சேலைன் மருந்தினை பயன்படுத்தி 3,000 க்கும் மேற்பட்ட போலி கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் கிழக்கு மாகாணமான சாண்டோங் உள்ளிட்ட பல இடங்களில் போலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் குறித்த சந்தேக நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இவ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Hot Topics

Related Articles