உலகம்

இரண்டாவது தடவையாக ஸ்குவாஷ் சாம்பியனாகியுள்ள ஸெலீஹா இஸ்ஸதீன்!

இலங்கையின் 40 ஆவது தேசிய ஸ்குவாஷ் போட்டித் தொடரின் மகளிர் பிரிவில் பாதொம் ஸெலீஹா இஸ்ஸதீன் இரண்டாவது தடவையாக சாம்பியனாகியுள்ளார்.

இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தப் போட்டிகள் எஸ்எஸ்சீ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில், ஸெலீஹா இஸ்ஸதீன் மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில் சந்திமா செனாலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.

இதேவேளை, பாதொம் ஸெலீஹா இஸ்ஸதீன் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Hot Topics

Related Articles