உலகம்

ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் ஹைப் ஸ்ரீலங்கா!

ஹைப் ஸ்ரீலங்காவானது, இளைஞர் வலுவூட்டல் கட்டமைப்பில் ஒரு புதுத் திருப்பத்தை ஏற்படுத்தும் முன்முயற்சியின் ஒரு வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.

சுயாதீன கொள்கை சிந்தனையாளர்இ ஹைப் ஸ்ரீPலங்கா
நாட்டின் முதல் மற்றும் ஏக இளைஞர் மேம்பாட்டு இன்குபேட்டரான (Youth Empowerment Incubator) ஹைப் ஸ்ரீPலங்காவானது 2021 ஜனவரி 25 ஆம் திகதி அதன் முதல் ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது.

2020 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தேசிய இளைஞர் வலுவூட்டல் கட்டமைப்பில் இளைஞர் வலுவூட்டல் இன்குபேசன் (Youth Empowerment Incubation) எனும் ஒரு புதுவித அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதில் ஒரு உன்னதமான பயணத்தை ஹைப் ஸ்ரீP லங்காவானது மேற்கொண்டு வருகின்றது.

இளைஞர் வலுவூட்டல் இன்குபேசன் என்பது நாட்டின் இளைஞர் வலுவூட்டல் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதாகும்.

இது கீழிருந்து மேலான (bottom-to-top approach) அணுகுமுறையை இளிவாக்கும் அதேவேளை கீழ்மட்டத்திலிருந்தும் மேல்மட்டத்திலிருந்தும் இளைஞர்களின் பங்களிப்பை சமவளவு ஊக்குவிப்பதன் மூலம் மிகவும் பயனுள்ள இளைஞர் வலுவூட்டல் செயல்முறையை செயற்படுத்த முயல்கின்ற ஒரு முன்முயற்சியாகும்.

ஹைப் ஸ்ரீPலங்காவின் அனைத்து கொள்கைகளும் அதனால் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் அடைவு குறிக்கோள்களாக எல்லா கட்டங்களிலும் உள்வாங்கப்பட்டிருக்கின்றது.

அந்தக் குறிக்கோள்களாவன இளைஞர் கொள்கை உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய இளைஞர் வலுவூட்டல் போன்ற உயர்மட்ட இளைஞர் மேம்பாட்டு செயல்முறைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரித்தல், உள்நாட்டு இளைஞர் வலுவூட்டல் கட்டமைப்பில் நிலைபேறான பங்குதாரர்களாக இளைஞர் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கு முயற்சித்தல் என்பனவாகும்.

ஹைப் ஸ்ரீP லங்கா அமைப்பின் உள்ளக கலாச்சாரமானது அதன் மூன்று முக்கிய தூண்களான நட்புறவு, ஆற்றல் வெளிப்பாடு மற்றும் முறையான கவனம் ஆகியவற்றின் மீது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைப் ஸ்ரீPலங்காவின் திறன்விருத்தி திணைக்களத்தின் ஒரு முக்கிய நீண்டகால திட்டமாக நெக்ஸஸ் திட்டம் (Project Nexus) உள்ளது. நாட்டின் இளைஞர் அமைப்புக்களுக்கிடையே கூட்டாண்மை மற்றும் நெட்வொர்க்கிங்கை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இது நாடு முழுவதும் இருந்து 65 இளைஞர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களை இதுவைரையில் உள்வாங்கியுள்ளது.

இந்த திட்டத்தில், ஹைப் ஸ்ரீPலங்காவானது தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் அமைப்புகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை இணைக்கும் ஒரு நெக்ஸஸ் புள்ளியாக செயல்படுகின்றது.

நெக்ஸஸ் திட்டமானது மீண்டும் மீண்டும் முன்முயற்சிகள் உருவாக்கப்படுவதை குறைப்பதன் மூலம் இருக்கின்ற வளங்களை சிறப்பாக விநியோகிப்பதற்கும், சமூக-பொருளாதார சிக்கல்களில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பிரச்சினைகளை நோக்கி கவனத்தை குவிப்பதற்கு ஊக்குவிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு அப்பால் இந்த திட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு, ஹைப் ஸ்ரீPலங்காவின் திறன் விருத்தி துறையின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நகர்ப்புற மைய அமைப்புகளுக்கும், ஏனைய கீழ்மட்ட செயற்பாட்டு சமூக சேவை அமைப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக, சமூக மட்டத்தில் இயங்கும் இளைஞர் அமைப்புகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை நெக்ஸஸ் திட்டத்தில் இணைப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.

இன்குபேட்டரின் இரண்டாவது குறிப்பிடத்தக்க முயற்சி ஹைப் பொலிசி டேங்க் ஆகும்.

ஹைப் பொலிசி டேங்க் என்பது ஒரு சுயாதீன சிந்தனைக் குழுவாகும், இது நாட்டின் இளைஞர் கொள்கை கலந்துரையாடல் தளங்களுக்கு கல்வி, உள்ளடக்கிய இளைஞர் மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் போன்ற துறைகளில் முன்மொழிவுகளை முன்வைப்பதில் வெற்றிகண்ட தனிநபர்களை உள்ளடக்கிய சுயாதீன கொள்கை சிந்தனையாளர்களின் குழுவாக இது விளங்குகின்றது.

ரோயல் கல்லூரியின் ஐக்கிய நாடுகளின் கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி முறையின் தயார்நிலை பற்றிய கணக்கெடுப்பானது இதன் முன்முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இலங்கையில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி முறைகளில் கல்விப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் கல்விசார் சவால்கள் குறித்த கணக்கெடுப்பானது தேசிய கல்வி சுற்றுச்சூழல் அமைப்பின் கற்பித்தல் சவால்கள் குறித்த தரவுகளை சேகரிக்க நாட்டின் கல்வியாளர்களிடையே வழங்கப்பட்டது.

இத்தகைய ஆய்வுகள் மற்றும் அதன் விளைவாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம், ஹைப் பொலிசி டேங்க் ஆனது கொள்கை மற்றும் கல்விசார் கலந்துரையாடலில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹைப் ஸ்ரீPலங்காவின் ஒரு குறிப்பிடத்தக்க திணைக்களமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் திணைக்களம் கானப்படுகின்றது, இதன் முக்கிய கவனம் இளைஞர்களின் முறையான மற்றும் நிலையான வளர்ச்சியில் உள்ளடக்கல் ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

எந்தவொரு நிலையான இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளுக்கும் உள்ளடக்கல் ஒரு முக்கிய தூணாகும் என்பதை இந்த துறையால் மேற்கொள்ளப்படும் பணிகள் நினைவூட்டுகின்றன.

இந்த துறையின் முதல் பெரிய பணி, தேசிய இளைஞர் வலுவூட்டல் அமைப்பின் பங்குதாரர்களிடம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உணர்த்துவதை நோக்காக கொண்ட மாற்றுத்திறனாளிகளின் உணர்திறன் குறித்த ஒரு தொகுதியை உருவாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமித்ததாகும்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் ஒரு பிரச்சாரத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டது இந்த திணைக்களத்தின் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகும்.

ஹைப் ஸ்ரீPலங்காவின் இளைஞர் வலிமையாக்கல் மற்றும் செயற்பாட்டுத் திணைக்களம் இளைஞர் பொது முன்மொழிவுத் தொடரைத் துவக்கியது, இதில் முக்கிய பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்களை மாற்றுவது அல்லது பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பான முக்கிய பரிந்துரைகள் மற்றும் விதிகள் அடங்கிய அறிக்கைகளை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் ஆகியவை அடங்கும்.

நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களுக்கு தற்போது இரண்டு திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பின் சாத்தியமான ஏற்பாடுகள் குறித்த இளைஞர் பொது முன்மொழிவு இது முதல் முயற்சியாகும், இது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இலங்கையின் வணிகச் சட்டத்திற்கான சாத்தியமான சீர்திருத்தங்கள் குறித்த இளைஞர் பொது முன்மொழிவு வணிகச் சட்ட சீர்திருத்த நிபுணர் குழு சிறப்பு பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஹைப் ஸ்ரீPலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய திட்டங்கள், இளைஞர்களை உள்ளடக்கிய மற்றும் நிலைபேறான வலுவூட்டலை நோக்கி ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் மேம்பாட்டு பாதையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே செயற்படுகின்றது.

இளைஞர் வலுவூட்டல் கட்டமைப்பின் தற்போதைய முன்மாதிரிகளை மாற்றுவதற்கு அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பதை எமது அமைப்பு உறுதியாக நம்புகிறது.

எனவேதான், இலங்கையின் 4.64 மில்லியன் இளைஞர்களை வலுவூட்டுவதற்கான தேசிய கட்டமைப்பில், அனைத்து இளைஞர் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் இளைஞர் வளர்ச்சியின் பிற பங்காளர்களை ஹைப் ஸ்ரீPலங்காவுடன் கைகோர்க்குமாறு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

 

Hot Topics

Related Articles