அனைத்து இலங்கையர்களுக்குமான வங்கியாளர் எனும் பிரசாரத்தை ஆரம்பிக்கிறது HNB

தனித்துவமான மற்றும் விதிவிலக்கான உள்ளுர் தொழில்முனைவோரின் சாதனைகளை கொண்டாடும் முயற்சியில், ‘அனைத்து இலங்கையருக்கும் ஒரு வங்கியாளர்’ஐ HNB PLC அறிமுகம் செய்தது.

HNBஇன் அனைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரசாரம் அதன் கணிசமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் வாடிக்கையாளர் தளத்தில் தலைசிறந்த தொழில்முனைவோரின் சாதனைகள் மற்றும் பயணத்தை காட்சிப்படுத்தவுள்ளது.

‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரைவாசிக்கும் மேல் உற்பத்தி மற்றும் 45% வேலை வாய்ப்பைக் கொண்ட ஒரு துறையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் துறை காணப்படுவதுடன் இந்த நாட்டிலுள்ள பொருளாதாரத்தின் உயிர் நாடியாகவும் உள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் பிரிவை HNB, தனியார் துறை வங்கிகளிடையே நீண்டகாலமாக மேற்கொண்டிருப்பதால் முடிந்தவரை அதிக பட்ச உதவிகளை வழங்குவது எமது பொறுப்பு என்று நாங்கள் உணர்ந்தோம்.

‘இந்த பிரசாரத்தின் மூலம், இலங்கையின் மிக வெற்றிகரமான சில நிறுவனங்களை வெளிகொண்டுவர ஒரு மெய்நிகர் இடத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும், இதன் மூலம் அவர்களின் வியாபாரத்தின் (Brand) விழிப்புணர்வை உயர்த்தவும், இந்த வர்த்தகங்களின் வளர்ச்சியை தக்க வைக்கவும் உதவுவோம், அதேநேரத்தில் தங்களுக்கென்று தொழிலை ஆரம்பிக்கும் கனவுடன் உள்ளவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

தங்களது காலடியைப் பதிக்கக்கூடிய இச்சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் (SME) இந்த நாட்டின் அடுத்த தலைமுறைக்கான தலைசிறந்த நிறுவனங்களாக மாறலாம்.

நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடித்தளத்திலும் நாங்கள் உங்களுடன் இருப்போம்.’ என சஞ்ஜெய் விஜேமான்ன தெரிவித்தார்.

1989ஆம் ஆண்டில் ‘கெமி புபுதுவ’ எனும் பெயரின் கீழ் SME துறைக்கு குறிப்பாக வழங்கப்பட்ட பிரத்தியேக தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை நிறுவிய முதல் தனியார் துறை வங்கியாக HNB ஆனது.

நாடு முழுவதிலும் கீழ்மட்டத்திலுள்ள சமூகங்களுக்கு முக்கிய நிதி சேவைகளை வழங்கும் அதேவேளையில், வங்கி தனது SME               வாடிக்கையாளர்களுக்கு பல தலைமுறையாக தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை சிறந்த முறையில் பேணுவதற்கு தேவையான அலோசனை மற்றும் திறன்களை வழங்கி வந்துள்ளது.

ஆலோசனை சேவைகளுக்கு மேலதிகமாக, உள்ளுர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் வர்த்தக இடத்தைப் பிடிக்க வாடிக்கையாளர்களுக்கு வங்கி அதிக ஆதரவையும் வழங்குகிறது.

இதன் விளைவாக, பொருளாதாரத்தின் முக்கியமான பிரிவுகளுக்கு நிலையான நிதித்தீர்வுகளை வழங்குவதற்கான அதன் விரிவான நிதி ஆதாரங்களையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக HNB தொடர்ந்து உள்ளுர் மற்றும் உலகளாவிய பாராட்டுக்களைப் பெற்றது.

கொவிட்; தொற்றுநோயை அடுத்து SMEக்களுக்கு செயற்பாடு மூலதன ஆதரவை வழங்க HNB 5 பில்லியன் ரூபா நிவாரண நிதியை அறிமுகப்படுத்தியது.

நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் அமைத்த சௌபாக்கியா கொவிட்-19 மறுநிதியளிப்புக் கடனை இந்த நிதி முழுமையாக்கியது.

அரசாங்க நிதியுதவி கடன்களைப் பெற முடியாத விண்ணப்பதாரர்களுக்கு HNB COVID நிவாரண நிதியிலிருந்து குறைவான வட்டி விகிதத்தில் ஒரு செயற்பாடு மூலதனக் கடனைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இம்முறை மூலம் தொற்றுநோயால் ஏற்படும் இடையூறுகள் மூலம் அவற்றை ஆதரிப்பதற்காக பல சாத்தியமான SMEகளுக்கு நிதியுதவிக்கு முன்னுரிமை அணுகல் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிப்பதற்காக HNB தனது சொந்த நிதியைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில், SMEக்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறுவதற்காக பிரெஞ்சு அபிவிருத்தி வங்கியின் தனியார் துறை நிதிக் குழுவான Agence Francaise de Développement (AFD)இன் Proparco உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தையும் வங்கி கைச்சாத்திட்டது.

தொழில்நுட்ப புத்தாக்கங்களால் முதன்மையில் அமையும் வங்கியின் பங்கைக் கருத்திற் கொண்டு, முழுமையாக முடக்கப்பட்ட காலப்பகுதியில் இந்தத் துறையில் தடையற்ற சேவைக்கு உத்தரவாதம் அளிக்க விரிவான டிஜிட்டல் வங்கிச் சேவைகளின் வடிவத்தில் உடனடியாக செயற்பட HNBஆல் முடிந்தது.

இவற்றில் மலிவு விலை Bluetooth மூலம் இயக்கப்பட்ட அட்டை கட்டண சாதனங்கள், MOMO மற்றும் HNB SOLO எனும் முன்னோடியாக QR குறியீடு அடிப்படையிலான மொபைல் கொடுப்பனவு பயன்பாடு பயனர்களுக்கு பாதுகாப்பான முறையில் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடிய திறனை வழங்குகிறது.

கூடுதலாக, AppiGo போன்ற விரைவான கண்காணிப்பு வங்கிச் சேவையானது – End-to-End இலத்திரனியல் வர்த்தக திறன்களைக் கொண்ட வர்த்தகங்களை எளிதாக்கும் தளம் – இலங்கை முழுவதும் நடைபெற்று வரும் plug-and-play e-commerce புரட்சியில் இணைய வர்த்தகர்களுக்கு உதவுகிறது.

நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்களைக் கொண்ட HNB இலங்கையின் மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகும்.

இது டிஜிட்டல் வங்கியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை முன்னோக்கிச் செல்வதற்கான முயற்சிகளுக்கு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேச கடன் மதிப்பீட்டை பெற்ற முதலாவது இலங்கையிலுள்ள வங்கி HNB ஆகும். இது Moody’s Investors Service இறையாண்மைக்கு இணையாக மதிப்பிடப்படுகிறது. HNB இன் தேசிய நீண்டகால மதிப்பீடு AA+ (lka)க்கு இரண்டு படிகள் ஏறி அண்மையில் Fitch Ratings (Lanka) Ltd மதிப்பீட்டினைப் பெற்றது.

Hot Topics

Related Articles