உலகம்

அயோத்தி ராமர் கோயிலை நிர்மணிக்க 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சாமியார்!

கடந்த 60 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்து வரும் சுவாமி சங்கர்தாஸ், அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக 1 கோடி இந்திய ரூபாய் நிதியை வழங்கி அணைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக இவர் வாழ்ந்து வருகின்றார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தான் சேமிப்பை கோயில் கட்டுமான பணிக்காக நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.

வங்கியில் உள்ள தமது பணத்தை 1  கோடி ரூபாய்க்கான காசோலையாக வழங்கியுள்ளார்.

குகையில் வசித்து வரும் சாமியார், இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குகை சாமியார், தாம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குகையில் வசித்து வருவதாகவும். தம்மை காண வருகை தரும் பக்தர்களிடமிருந்து கொடுத்துச்செல்லும் நன்கொடையை சேமித்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கோயிலுக்கு தான் நாம் அனைவரும் நீண்ட காலமாக கனவு காண்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Hot Topics

Related Articles