உலகம்

இலங்கையில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மரு்துகள் நேற்றைய தினம் இலங்கையை அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கும் பணிகளை இந்நாட்டு சுகாதார துறை ஆரம்பித்துள்ளது.

மேல் மாகாணத்தின் பிரதான வைத்தியசாலைகள் ஆறில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி கொவிட் 19 தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் முப்படையினர்,

காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியை செலுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles