தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா, 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதை வழக்கமாக வைத்துள்ள இவர் சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை சைக்கிள் பயணம் செய்ததாக கூறி இருந்தார்.
இந்நிலையில், அவர் தமது டுவிட்டர் பதிவில் சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவில், 400 கி.மீ பி.ஆர்.எம் முடிந்தது அழகான சவாரி .. கடினமான பாதை .. எப்போதும் ஒரு கற்றல் வளைவு சாம்பியன்களுடன் சவாரி செய்தது என பதிவிட்டுள்ளார்.
ஆர்யா உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருவதுடன் சைக்கிள் பந்தய வீரராகவும் இருக்கிறார்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அவருக்கு ரசிகர்கள் பலர் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு நடிகர் விவேக்கும் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.