உலகம்

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் குண்டுவெடிப்பு தாக்குதல் !

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற  குண்டு வெடிப்பு சம்பவங்கள் 02 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 04 பேர் காயமடைந்துள்ளனர்.

காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ் காந்த கண்ணிவெடி தாக்குதலில் 2 போலிஸார் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சலீம் கர்வான் பகுதியில் போலிஸார் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 2 போலிஸார் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் காபூல் நகரின் கோலாயீ தவகானா பகுதியில் மற்றுமொரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு பயங்கரவாத குழுவும் இதுவரை பொறுப்பு ஏற்றக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles