27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் நபர்!

0
99

கனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் என்ற வயது 64 வயத நபர் 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றார்.

சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன் பாலிகேமி முறையில், மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக வின்ஸ்டனின் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு 27 மன்விகள் இருந்துள்ளனர்.

பாலிகேமி என்பது கணவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் முறையாகும்.

பிளாக்மோர் குடும்பம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பவுண்டிஃபுலில் உள்ள ஒரு தேவாலயக் குழுவின் ஒரு பகுதியாக அறியப்படுகின்றது.

அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக்மோரின் மகன் மெர்லின், டிக்டாக்கில் தனது குடும்பத்தினர் போட்டோக்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Merlin Blackmore, 19, who was born to 'Canada's most famous polygamist' 64-year-old Winston Blackmore in Bountiful, British Columbia, has built a huge social media following for his open and honest discussion about life in his unconventional family which includes '27 mothers'.
எனினும் அதில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம் .

ஆனால் சமீபகாலமாக தான் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தன் அம்மாவை ‘மம்’ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை ‘மதர்’ எனவும் அழைப்பதாக மெர்லின் பதிவுட்டுள்ளார் .

3 குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கைகளை தனது தந்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல தாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது அப்பாவுக்கு, அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘எம்’ என்கிற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விவசாயம் செய்து அறுவடை செய்து கொள்வோம் என்று மெர்லின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here