உலகம்

இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின விழா!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின விழா, தலைநகர் டில்லியில் இன்று நடைபெருகின்றது.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் மற்றும் டிராக்டர் பேரணி ஆகிய இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் குடியரசு விழா நடைபெற்ற வருகிறது.


குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இத்துடன் இவ் விழாவில், தலைமை விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, குறைவான பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வருடாந்திர அணிவகுப்பில் 15 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை, மற்றும் இராணுவம் மற்றும் கடற்படைப் அணிவகுப்பில் சமூக இடைவெளிக்கு அமையாக குறைவான வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு குடியரசு தினம் என்பது ஜனநாயக ரீதியில் ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை குறிக்கும் நாளாகும்.

இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.


இந்திய அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆகும். இந்திய சட்டத்தில் 448 ஆர்டிகிள்கள் உள்ளன. இவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பு 1955-ஆம் ஆண்டில் டில்லி ராஜ்பாத்தில் தான் முதன் முதலில் நடந்தது.


பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா போன்ற முக்கியமான பல தேசிய விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறமை மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

அத்துடுடன், போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன.


வளமையாக குடியரசு தினவிழா அணிவகுப்பு டில்லி ராஜபாதையில் குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரையில் நடைபெறும், எனினும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு விஜய் சவுக் முதல் நேஷன்ல் ஸ்டேடியம் வரை மட்டுமே அணிவகுப்பு நடைபெறுகின்றது.

குடியரசு தினநாளில் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் குடியரசு தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

குடியரசு தின அணிவகுப்பு இந்திய விமானப்படையின் அணிவகுப்புடன் முடிவுக்கு வரும் விஜய் சவுக்கில் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு மாலையில் நடைபெறுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles