உலகம்

பாடும் நிலா எஸ்.பி.பி க்கு இந்தியாவின் உயரிய விருது அறிவிப்பு!

இந்தியாவின் மிக உயரிய பத்ம விருதுகளில் தமிழகத்திற்கான பத்ம விபூஷண் விருதுக்கு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு, பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியலையும் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேரின் பெயர் பட்டியலையும் இன்று வெளியிட்டுள்ளது.

எஸ். பி. பாலசுப்பிரமணியம் இந்திய சினிமாவில் பின்னணிப் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி இவர், 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

இதன் காரணமாக உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இதே வேளை பத்ம ஸ்ரீ விருதுக்கு சாலமன் பாப்பையா தேர்வு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles