ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில் கூறியுள்ள பொய்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிகமான சர்ச்சைகளுக்கு உள்ளாகி பதவியிலிருந்து வெளியேறியுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில், 30,573 பொய்களை பொதுவெளியில் பேசியுள்ளார் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

குறிப்பாக தேர்தல் நெருங்கிய கடைசி 5 மாதங்களில் ட்ரம்ப் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி பதவியிலிருந்த முதல் ஆண்டில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 6 தவறான தகவல்களை தெரிவித்த அவர், இரண்டாவது ஆண்டில் 16 ஆகவும், மூன்றாவது ஆண்டில் 22 மற்றும் இறுதி ஆண்டில் 39 என அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.

டுடிவிட்டரில் அவர் தெரிவித்த தவறான தகவல்களில் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளது. புதிய வரி திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அளவில் வரிகளை குறைத்த அதிபர் தான் என, பொய்யான பெருமைகளை அவர் பேசியுள்ளார்.

கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட நிலையில், அமெரிக்காவின் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு தாமே காரணம் என ட்ரம்ப் ஆறாயிரத்திற்கும் அதிகமான முறை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோசமான சுகாதார உட்கட்டமைப்புக்கு முன்னாள் அதிபர் ஒபாமா தான் காரணம் என கூறியது, ட்ரம்பின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

இதேவேளை, தேர்தல் வெற்றி திருடப்பட்டு உள்ளது இது ஒரு மோசமான தேர்தல் என பல பொய்களை, ட்ரம்ப் கட்டவிழ்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறிய தவறான தகவல்களில் பல்வேறு தகவல்கள், அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles