பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான்.

சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எனினும் இதில் எது சிறந்தது என்று அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. இங்கு கிரீன் டீ மற்றும் பிளாக் டீக்கு இடையிலான வேறுப்பாட்டை பார்ப்போம்.

கிரீன் டீ தயாரிப்பில் பறிக்கப்பட்ட இலைகள் சேகரிக்கப்பட்டு, உலர்த்தப்படுகிறது.

அதன் பிறகு தட்டில் போடப்பட்டு சூடாக்கப்படுகிறது அல்லது ஆவியில் உலர்த்தப்படுகிறது.

இம்முறைகள் மூலம் இலையில் ஆக்ஸிஜன் சேருவது தடுக்கப்பட்டு இலையின் நிறமும் சுவையும் தக்கவைக்கப்படுகிறது.

கிரீன் டீயில் EGCG என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது இருதய நோய்களை எதிர்த்து செயலாற்றக்கூடியது.

கிரீன் டீ உடலிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி, சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது.

உடலின் வளர்சிதை மாற்றத்தை கிரீன் டீ ஊக்குவிப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

பிளாக் டீயை விட கிரீன் டீயில் அமிலத்தன்மை குறைகிறது. ஒரு கப் காஃபியில் உள்ள காஃபைனின் அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே கிரீன் டீயில் உள்ளது.

கிரீன் டீ முற்றிலும் இயற்கையானது.

பிளாக் டீ தயாரிக்க தேயிலையானது பறிக்கப்பட்டபின், உலர்த்தப்பட்டு, அரைக்கப்படுகிறது. பல்வேறு வழிமுறைகளால் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது.

இலையிலுள்ள நொதிகள் (என்சைம்) ஆக்ஸிஜனேற்றத்தால் கறுப்பு மற்றும் பழுப்பு நிறம் கிடைக்கிறது. நறுமணம் கூடுகிறது.

பிளாக் டீயில் எல் தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நாம் செய்பவற்றில் கவனம் செலுத்த உதவுவதோடு இளைப்பாறுதலையும் அளிக்கிறது.

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை குறைக்கிறது. பிளாக் டீயில் அமிலத்தன்மை அதிகம்.

இது இருதயத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. இருதயம் மற்றும் இரத்தநாளங்களை பாதுகாக்கும் தியாஃப்ளேவின் என்ற பிளாக் டீ யில் உள்ளது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை தியாஃப்ளேவின் கட்டுப்படுத்துகிறது.

ஒரு கப் காஃபியில் உள்ள காஃபைனின் அளவில் மூன்றில் ஒரு பங்கு பிளாக் டீயில் உள்ளது.

பிளாக் டீ நொதித்தலும் ஆக்ஸிஜனேற்றமும் அடைந்ததாகும்.

எனவே காஃபைனின் அளவை பொறுத்து எந்த டீ தேவையோ அதை பருகலாம்..

Hot Topics

இலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS

பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே...

DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work - GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில்...

SLINTEC மற்றும் Multilac Care இணைந்து வெளியிடும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே

COVID-19 இற்கு எதிரான முன்னோடி முயற்சியாக, Sri Lanka Institute of Nanotechnology (SLINTEC) உடன் இணைந்து Multilac Care, இலங்கையின் முதல் வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரேயினை அண்மையில்...

Related Articles