உலகம்

சிற்பம் போல் தோற்றமளிக்கும் உலகிலேயே அழுக்கான மனிதர் – காரணம் என்ன தெரியுமா?

உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த 87 வயதாகும் அமோவ் ஹாஜி அறியப்படுகிறார்.

தண்ணீர் மீதுள்ள பயத்தின் காரணமாக இவர் கடந்த 67 ஆண்டுகளாக குளிக்க வில்லையாம். இதனாலேயே அவர் உலகிலேயே அழுக்கான மனிதராக உள்ளார்.

தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் இவர் வசித்து வருகின்றார். குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோமோ என்று அமோவ் ஹாஜி நம்புகிறார்.

இவரின் உடல் முழுக்க புழுதி படிந்து அழுக்காகவே காட்சியளிக்கின்றது. சாம்பல் மற்றும் அழுக்குகளால் நிறைந்த இவரை பார்த்தால் ஒரு சிற்பம் போல் தோற்றமளிக்கின்றதாம்.

அமோவ் ஹாஜியின் உணவு பழக்கமும் முகம் சுழிக்கும் வகையியேலே உள்ளது. இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

Iranian Man Goes Without a Bath for 60 Years - See The Results (Video) -  Guardian Liberty Voice

அமோவ் ஹாஜிக்கு புகைக்கும் பழக்கமும் உண்டு. அடிக்கடி, தன் உடல் எப்படியிருக்கிறது கார் கண்ணாடிகளில் பார்த்துக் கொள்கிறார்.

உடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது.

இவருக்கு யாரும் முடி வெட்ட முன் வராததால் முடியை தீயை வைத்து கருக்கிக் கொள்கிறாராம்.

தன் இளமைக் காலத்தில் நடந்த சில சோக சம்பவங்களால் , அமோவ் ஹாஜி தனியாகவே வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Hot Topics

Related Articles