உலகம்

ஈராக்கில் இடம்பெற்ற இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் 32 பேர் பலி!

ஈராக்கின், பாக்தாத் நகரில் பாப் அல்ஷார்ஜி பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் கூடக்கூடிய சந்தை பகுதியில் நேற்று காலை குறித்த தற்கொலை வெடிகுண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஈராக்கிய படைகளின் தளபதியாகவுள்ள பிரதமர் அல்காதிமி, பாதுகாப்பு மற்றும் உளவு பிரிவு தளபதிகளுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தி பாதுகாப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதன்பின் 5 மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ் இரட்டை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்றுள்ளது.

இவ் அமைப்பை சேர்ந்த அபு யூசிப் அல் அன்சாரி மற்றும் முகமது ஆரிப் அல் முகாஜீர் ஆகிய இரு தற்கொலை குண்டுதாரிகளும் ஷியா பிரிவு மக்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles