உலகம்

இன்று முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீள திறப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்  திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீள நாட்டிற்கு அனுமதிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் மீள திறக்கப்பட்டதன் பின்னர் ஓமான் – மஸ்கட்; நகரில் இருந்து ஓமானுக்கு சொந்தமான டவ்ளியுவ் வை 371 என்ற முதலாவது வணிக விமானமே இன்று காலை 7.40 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானத்தின் ஊடாக 50 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததுடன், அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக யுக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles