பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது.

2020 டிசம்பர் 01 முதல் டிசம்பர் 31 வரை நடந்த இந்த பிரசாரத்தில் வீடுகளில் தங்கியிருந்த மக்களை தாம் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் கொண்டாடியதை சித்தரிக்கும் பருவகால வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தது.

இந்த வாழ்த்துக்கள் Pelwatte இன் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட வாழ்த்துக்களில், மிகவும் ஆக்கபூர்வமான 10 அட்டைகள் தெரிவு செய்யப்பட்டு, வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ பிரசாரமானது பண்டிகை கொண்டாட்டங்களை வெளிப்படுத்தவும், பேஸ்புக் வழியாக தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணையவும் ஒரு தளத்தை வழங்கியது. இந்த பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்த்துக்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், அன்பு மற்றும் மகிழ்ச்சியின் ஆசீர்வாதங்களால் பொழிந்தனர்.

கிறிஸ்மஸ் என்பது ஆண்டின் வண்ணமயமான அலங்காரங்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் கரோல்களால் நிரம்பிய காலப்பகுதியாகும். இது மணிகளின் இனிய ஒலியாலும், நினைவுகளை மீட்கும் உணவு மற்றும் பானங்களைக் கொண்ட உணவு மேசையாலும் சுற்றுப்புறத்தை நிரப்புவதுடன், அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வதுடன் இதயங்களை அன்பாலும் பாசத்தாலும் நிரப்புகிறது.

எனினும், இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையானது கடந்த வருடங்களை விட வித்தியாசமானதாகும். இந்த தொற்றுநோய் நிலைமையானது ஒன்று கூடுவதையும், நேரடித் தொடர்புகளையும் சவாலுக்குட்படுத்திய போதிலும் இந்த பருவகாலத்தின் ஊக்கம் மாறவில்லை.

இந்த பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த அக்மால் விக்ரமநாயக்க, “கிறிஸ்மஸ் என்பது அன்பு மற்றும் மகிழ்ச்சி, சந்திப்பு மற்றும் வாழ்த்துக்கள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேல் அக்கறை மற்றும் பகிர்தல் தொடர்பிலானதாகும்.  இந்த சவாலான காலங்களில் கூட குடும்பங்களுக்கு கிறிஸ்மஸின் அர்த்தம் மற்றும் ஊக்கத்தைக் கொண்டு வர நன்கறியப்பட்ட வர்த்தகநாமமான Pelwatte உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்களுக்கு கிடைத்த மறுமொழிகளால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன், இந்த வாழ்த்துக்களை அனைத்து இலங்கையர்களுடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நம்பிக்கை, தரம் மற்றும் தொடர்பு ஆகிய எமது தூண்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட பல அர்த்தமுள்ள முயற்சிகளுடன் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் முழு நாட்டையும் ஆதரிப்பதில் Pelwatte முன்னணியில் உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

பல நுழைவு ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் போட்டி தீர்மானிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் ஆரம்பத்தில் Pelwatteவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை ‘லைக்’ செய்வதுடன், இந்த பிரசாரத்தைப் பற்றிய முக்கிய பதிவினைப் பகிர்வதுடன், வாழ்த்துக்களை தகவலாக பகிர்வதற்கு முன்பு கருத்துகள் பிரிவில் 5 நண்பர்களை  ‘tag’ செய்ய வேண்டியும் இருந்தது. உணவைத் தயாரிப்பதற்கு எந்தவொரு Pelwatte தயாரிப்பும் பயன்படுத்தப்பட்டிருந்தால், பங்கேற்பாளர்கள் அவற்றையும் குறிப்பிட ஊக்குவிக்கப்பட்டனர்.

கொடுத்தல் மற்றும் பகிர்வதற்கான பெறுமானங்களை நிலைநிறுத்துவதற்கும், சவாலான தருணத்தையும் மீறி மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் இருக்க இந்த பிரசாரம் கருவியாக இருந்தது. இந்த பிரசாரத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இந்த பிரசாரம் அடைய எதிர்ப்பார்த்த உண்மையான பெறுமானங்களின் தூதுவர் என்பது Pelwatteவின் கருத்தாகும்.

Hot Topics

இலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS

பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே...

DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work - GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில்...

SLINTEC மற்றும் Multilac Care இணைந்து வெளியிடும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே

COVID-19 இற்கு எதிரான முன்னோடி முயற்சியாக, Sri Lanka Institute of Nanotechnology (SLINTEC) உடன் இணைந்து Multilac Care, இலங்கையின் முதல் வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரேயினை அண்மையில்...

Related Articles