உலகம்

வரலாற்று வெற்றியை பெற்றுள்ள இந்திய அணி : போனஸ் பரிசாக ஐந்து கோடி ரூபாய் அறிவிப்பு!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கி கொண்டுள்ளது.

இந்த வெற்றிக்குக்காக இந்திய அணிக்கு ஐந்து கோடி இந்திய ரூபாய் போனஸ் பரிசாக வழங்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்த தகவலை பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தெரிவித்ததுள்ளனர்.

அத்துடன் இது இந்திய கிரிக்கெட்டுக்கான சிறப்பு தருணங்கள் எனவும், எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இப் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஷுப்மான் கில் 91 ஓட்டங்களையும், ஆட்டம் இழக்காமல் ரிஷப் பண்ட் 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலுச் சேர்த்துள்ளனர்.

இதன்மூலம் இந்தியா அணி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

முன்னணி வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றுள்ளமை மேலும் சிறப்பை தந்துள்ளது.

 

 

Hot Topics

Related Articles