உலகம்

ஜோ பிடன் மற்றும் கமலா ஹரிஸை கோலம் இட்டு வரவேற்கும் அமெரிக்கர்கள்!

ஜோ பிடன் மற்றும் கமலா ஹரிஸின் பதவியேற்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் ‘கோலம் 2021′ இணையவழி முயற்சியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட நபர்களும், இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றுள்ளனர்.

பைடன் மற்றும் ஹாரிஸை ‘அனைவருக்குமான ஜனாதிபதி’ என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும், அமெரிக்காவின் பல கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

US: Kolam artistry part of Biden-Harris inauguration ceremony
புதிய நிர்வாகத்துக்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வரும் கோலங்களை வாஷிங்டன் போலிஸாரின் அனுமதியுடன் வெள்ளை மாளிகையின் முன் காட்சிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது.

எனினும், வாஷிங்டனில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமையால் இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Agency News | Auspicious Kolam Drawings Mark Kickoff of Biden-Harris  Inauguration Ceremony | LatestLY
இதன் விளைவாக, கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் படங்கள் ஒரு காணொளியாக உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இவ் காணொளியை காட்சிப்படுத்துவதற்கான இடமும், நாளும் தீர்மானிக்கப்படும் என்று ‘கோலம் 2021′ ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles