உலகம்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் : சீனாவில் அதிர்ச்சி!

சீனாவில்  உள்ள தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட ஐஸ்கிரீம் மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட சீனாவின் தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களின் மூன்று மாதிரிகளில் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ் ஐஸ்கிரீம்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்து நிறுவனம் ஒன்றிலிருந்து இவ் தொழிற்சாலைக்குப் பால் உற்பத்தி மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

தொழிற்சாலையில் உள்ள சுகாதார குறைப்பாடு காரணமாக வைரஸ் தொற்று மனிதரில் இருந்து ஐஸ்கிரீம்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையில் 1,662 ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 700 பேரின் முடிவுகள் வெளியாகியுள்ள போதிலும் அவர்களுக்குத் தொற்று உறுதியாகவில்லை.

 

Hot Topics

Related Articles