உலகம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள சுகாதார சேவையாளர்கள்!

இலங்கையில் 20 வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார சேவையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கமைய, பாணந்துறை, எல்பிட்டி, பொது மருத்துவமனைகளிலும், கம்பளை ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட 20 வைத்தியசாலைகளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles