கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு தம்பதி அசத்தியுள்ளனர்.
இந்தியாவின், மதுரையில் இடம்பெற்றுள்ள குறித்த திருமண நிகழ்வில் தம்பதியினர் மொய்ப் பணத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு டிஜிடல் முறை மூலமாகப் பணத்தை வைப்பிலிடும் கியூ.ஆர். முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்காக தங்களது திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண மண்டபத்தில் கியூ.ஆர். குறியீட்டைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த முறை மூலமாகத் திருமணத்திற்கு வருகை தரமுடியாத உறவினர்களும் மொய்ப் பணத்தை வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பதாக பணம் பரிவர்தனை செய்யும் அட்டைகள் மூலமாக மொய்ப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பணம் மற்றும் ஏ.டி.எம் அட்டைகளை கைமாற்றுவதால் ஏற்படும் கொரோனா பரவல் இம் முறை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இதன் காரணமான இவர்களின் இந்த யோசனை பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.