இலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் !

இலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் அடையாளம்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 53,074 ஆக உயர்வடைந்துள்ளது.

மினுவங்கொடை பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 747 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 28 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,274 உயர்வடைந்துள்ளதுடன் 7,641 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

13, 14, 15,16 ஆகிய தினங்களில் இவ் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 வயது ஆண் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்!

நாடாளுமன்ற பணிக்குழுவில் 5 பேருக்கும், நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேருக்கும் கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட 943 பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே இவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Hot Topics

இலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS

பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே...

DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work - GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில்...

SLINTEC மற்றும் Multilac Care இணைந்து வெளியிடும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே

COVID-19 இற்கு எதிரான முன்னோடி முயற்சியாக, Sri Lanka Institute of Nanotechnology (SLINTEC) உடன் இணைந்து Multilac Care, இலங்கையின் முதல் வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரேயினை அண்மையில்...

Related Articles