உலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது.
அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில் தமிழர்களின் வீர விளையாட்டாக சிறப்பிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் ஆரம்பமாகியுள்ளன.
இந்த ஆண்டின் முதலாவது ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் தொடங்கியுள்ளது.
இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 788 காளைகள் களமிறக்கப்படுகின்றன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிதையடுத்து விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன.
இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை போட்டி நடைபெறுகிறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.