உலகம்

கணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்ற மனைவிக்கு அபராதம்!

கனடாவில் ஒரு தம்பதியினர் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷெர்ப்ரூக் நகரில் உள்ள ஒரு தம்பதி இதனை சாதகமாக பயன் படுத்தி ஊரடங்கின் போது வெளியில் செல்ல முயன்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகில் தனது கணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்றுள்ளார்.

இதனை கண்டு பொலிஸார் வினவியதையடுத்து “தனது நாயுடன் நடைபயிற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்திற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் 1,212 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles