வாட்ஸ்அப் செயலி அன்மையில் தமது தனிநபர் கொள்கையில் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக பலரும் வாட்ஸ்அப் பாவனையை தவிர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஏராளமான வாட்ஸ்அப் பாவனையாளர்கள் மற்றை செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் ஒரு விளக்கத்தை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்து உள்ளது.
– வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.
– குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.
– வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் இருப்பிடத்தை பார்க்க முடியாது.
– வாட்ஸ்அப் பயனரின் தொடர்பு இலக்கங்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.
– வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.
– குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
– பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.
அதன்படி, புதிய தனியுரிமைக் கொள்கை நேரடியாக வாட்ஸ்அப் வணிகக் கணக்குகளுடன் தொடர்புடையது என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அத்தோடு வணிகக் கணக்குகளுக்கு சிறந்த சூழலைக் கொடுப்பதற்கும் அவற்றை பரப்புவதற்கும் மட்டுமே புதிய கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பயனரின் அழைப்புகளையும் செய்திகளையும் பதிவுகளாக Whatsapp வைத்திருக்காது என்றும் கூறியுள்ளது. அதாவது, அந்த தகவல்கள் கண்காணிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
எனினும் உங்களின் இருப்பிடம், ஐ.பி முகவரி, போன்றவற்றை வாட்சப்ப பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.