உலகம்

பாலியல் குற்றங்களுக்காக மதத்தலைவர் ஒருவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை!

துருக்கி நாட்டின் மதத்தலைவர் ஒருவருக்கு இஸ்தான்புல்லில் உள்ள நீதிமன்றம் 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

64 வயதான அட்னன் ஒக்டர் (Adnan Oktar) வழிபாட்டு அமைப்பின் மதத்தலைவர் ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவரின் வீட்டிலிருந்து 63000 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவை தோல் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

அத்துடன் தனக்கு 1000 தோழிகள் இருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

இவர் ஒரு பழமைவாதத் தலைவராக இருந்த போதிலும் எப்போதும் பெண்களுடனேயே தோன்றுவார்.

இவர் மீது பாலியல் குற்றம் பிரதானமாக சுமத்தப்பட்ட போதும் 10 தனித்தனியான குற்றங்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, மோசடி குற்றச்சாட்டுகள் என்பன இவர் மீது சுமத்தப்பட்டது.

அத்துடன், அரசியல் மற்றும் ராணுவத்தில் உளவு பார்க்க முயற்சி செய்ததாகவும் இவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளன.

The preacher was found guilty of forming a gang with criminal intent, sexual abuse of minors, sexual assault, kidnapping, blackmail, fraud and espionage
இவ் குற்றச்சாட்டுகளை விசாரித்துவரும் பொலிஸார் 236 சந்தேக நபர்களை விசாரித்து, அவர்களில் 78 பேர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே இவர் தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

Hot Topics

Related Articles