உலகம்

இலங்கையில் கொரோனாவால் 08 மரணங்கள் பதிவு : ஜனவரி இறுதிக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசி…!

இலங்கையில் இன்று (11) நாட்டில் 568 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 48,665 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் இன்று மேலும் 766 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 42091 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளது.

வெவ்வேறு தினங்களில் பதிவாகியுள்ள இவ் மரணங்களில் 36, 45, 52,61, 51,70, 67, 57 ஆகிய வயதுகளை உடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி இறுதிக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசி…!

இலங்கைக்கு ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதா தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles