கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீஸ்வரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு பாலி நகருக்கு தன் மனைவியுடன் பயணித்துள்ளார்.
இதற்காக அவர் இந்தோனேசியப் பண மதிப்பில் 6 லட்சம் ருபியா செலவழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இவர் இந்த விமானத்தில் பணிப்பெண்களைக்கூட அனுமதிக்க வில்லையாம்.
மேலும் இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர், கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக எனது மனைவியுடன் செல்ல முழு விமானத்தையும் முன்பதிவு செய்ததாகவும் இந்த விமானத்தை முன்பதிவு செய்தபோது இது தனியார் ஜெட்டை வாடைகைக்கு எடுப்பதைவிட மலிவானது என்பதை தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது மனைவியுடன் அந்த விமானத்தில் பயணித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.