சேற்றில் பாதி புதைந்த நிலையில் மனித கால் விரல்? தேடிப்பார்த்ததில் அதிர்ந்து போன பொலிஸார்

சேற்று மண்ணில் புதைந்த நிலையில், மனித கால் விரல் தோற்றத்தில் இருந்ததால் அதனை பார்த்து அதிர்ந்து போன பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் தேடுதல் நடத்தியதில் அங்கு என்ன இருந்தது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இங்கிலாந்தின் கேட்ஷீட் நகரம் வின்லெடன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியுடன் நடைபயற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள வயல்வெளி சேறு நிறைந்த ஒரு பகுதியில் மனிதனின் காலின் பெருவிரல் ஒன்று சேறு நிறைந்த மண்ணில் புதைந்தவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக தனது கைத்தொலைப்பேசியில் அதனை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை போலிசாருக்கு அனுப்பி நடத்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலிசார் யாரேனும் ஒருவரை கொன்று சேற்று மண்ணில் புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல போலிஸ் அதிகாரிகள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பெண் கூறிய இடத்தில் சென்று பல மணி நேரம் மனித எச்சங்களை தேடும் பணியில்  ஈடுபட்டனர்.
மாலைமுதல் இரவு நேரவு வரை இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது.

பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் பெண் கூறியது போன்று மனிதனின் கால் பெருவிரல் புதைந்த நிலையில் இருப்பதை போன்ற இடத்தை போலிசார் கண்டுபிடித்தனர்.

தாம் சந்தேகித்தது போல் யாரோ ஒரு நபரை யாரோ கொன்று புதைத்திருப்பதாக பொலிஸார் எண்ணினர்.

பலத்த ஏற்பாடுடன் அந்த கால் பெருவிரலை சேற்றில் இருந்து எடுக்க முயன்றனர். அப்போது போலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சேற்றில் புதைந்திருந்தது மனிதனின் கால் விரல் அல்ல. அது உருளைக்கிழங்கு என்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

அந்த உருளைக்கிழங்கின் மேற்பரப்பை சுற்றி புஞ்சை காளான் முளைத்துள்ளது. இதனால் அந்த உருளைக்கிழங்கு தத்ரூபமாக மனிதனின் கால் பெரு விரல் போன்று தோற்றமளித்துள்ளது.

பல மணி நேர தேடுதல் வீனானபோதும் போலிசார் அந்த பெண்ணின் விழிப்புணர்வை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் மனிதனின் கால் விரல் போன்று தோற்றமளித்துள்ள அந்த உருளைக்கிழங்கு புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Hot Topics

இன்று முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீள திறப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்  திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு...

பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது. 2020 டிசம்பர் 01 முதல்...

Invite prosperity this Thai Pongal with NDB Wealth

Expert financial planner NDB Wealth invites everyone to herald bountiful prosperity this Thai Pongal, celebrating the joy and abundance of the first harvest of...

Related Articles