இந்தியாவில் இன்னும் சில தினங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பரிசோதனைக்காக பெற்றுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரழந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரிசோதனைக்காக தடுப்பூசி பெற்றுக்கொண்ட குறித்த நபர் 10 நாட்களுக்குப் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துள்ளார்.
விஷமே இவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசியின் பக்கவிளைவுகள் காரணமாக தன்னார்வலர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆனால் விஸ்ரா அறிக்கைக்குப் பிறகு உண்மையான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாரத் பயோடெக்கின் (Bharat Biotech) கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் (Covaxin) .
போபாலின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் துணைவேந்தர் டாக்டர் ராஜேஷ் கபூர் கூறுகையில்,
எனினும் 2020 டிசம்பர் 12 ஆம் திகதி (Covaxine) தடுப்பூசி பரிசோதனையில் 42 வயதான குறித்த நபரக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடரந்து அவர் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டதுடன் அவரது உடல்நிலை எட்டு நாட்கள் கண்காணிக்கப்பட்டதாக போபாலின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தன்னார்வலர் சோதனையில் பங்கேற்பதற்கு முன்பு ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.