உலகம்

உடலுறவின் போது மூச்சுத் திணறி ஆண் பரிதாப மரணம்!

உடலுறவின் போது கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு இறுகி மூச்சுத் திணறல் காரணமாக ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிராவின் (Maharashtra) நாக்பூரின் கபர்கேரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடலுறவின் போது உற்சாகத்தை அதிகரிப்பதற்காக அந்தப் பெண் ஆணின் கைகளையும் கால்களையும் நைலான் கயிற்றால் (Nylon rope) நாற்காலியில் கட்டியதுடன் கழுத்தில் மற்றொரு கயிற்றையும் கட்டியுள்ளார்.

இதுவே விபரீதமாக முடிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்காக அந்தப் பெண்ணைக் பொலிஸார் தடுப்புகாவிலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான வழக்கை பதிவு செய்து மேதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Hot Topics

Related Articles