உலகம்

புடவையில் ஜிம்னாஸ்டிக் செய்து இந்திய பெண் சாகசம் – வைரலாகும் காணொளி

இந்திய பெண் ஒருவர் புடவையைக் கட்டிக்கொண்டு ஜிம்னாஸ்டிக் செய்யும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அரியானாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பருல் அரோரா என்ற பெண்னே இவ்வாறு சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றவர் ஆவார்.

இந்த காணொளியை முதன்முதலில் அரோரா கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சேலையில் ஆபத்தான சாகசம் என்று அவர் புகைப்படம் மற்றும் காணொளி குறித்து தெரிவித்துள்ளார்.

தற் போது இவ் காணொளி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Hot Topics

Related Articles