உலகம்

நதியில் பஸ் குடைசாய்ந்து விபத்து – 23 பேர் வைத்தியசாலையில்!

இலங்கை பொலனறுவை – லங்காபுர கேகளுகம பகுதியில் உள்ள பராக்கிரம சமுத்திரத்திர கிளை நதியில்  பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் சேவையாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாதையை விட்டு விலகிய பஸ் அருகில் இருந்த பராக்கிரம சமுத்திரத்தின் கிளை நதியில் குடைசாய்ந்ததில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.


இந்த விபத்தில் காயமடைந்த 23 பேரும் பொலனறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிகப்பட்டுள்ளனர்.


இதேவேளை, இலங்கையில் வாகன விபத்துக்களில் நேற்றைய தினம் மாத்திரம் 9 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேரும், முன்னதாக இடம்பெற்ற விபத்துகளில் காயமடைந்த இரண்டு பேரும் இவ்வாறு உயிரிழந்ததாக ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்

Hot Topics

Related Articles