இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஜனவரி 16ஆம் திகதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதா மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுறிமை வழங்கப்பட உள்ளது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியதையடுத்து இந்தியாவில் எதிர் வரும் 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.
எனினும் வினியோகப்பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக இரண்டு நாட்களின் பின் இத்திட்டம் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.