உலகம்

முழுமையான அவுஸ்திரேலிய பட்டத்தை இலங்கையில் வழங்க Curtin பல்கலைக்கழகத்துடனான கூட்டாண்மையை SLIIT விஸ்தரித்துள்ளது

அவுஸ்திரேலியாவின் Curtin பல்கலைக்கழகத்துடனான தனது கூட்டாண்மையை புதுப்பித்து, விஸ்தரித்திருப்பதாக பட்டம் வழங்கும் பாரிய அரசுசாராத நிறுவனமான SLIIT அண்மையில் அறிவித்தது. விஸ்தரிக்கப்பட்ட இந்த கூட்டாண்மையின் கீழ் கணினி மற்றும் பொறியியலில் பல்கலைக்கழகத்தின் Curtin முழுமையான பட்டப் பாடநெறிகளை SLIIT கொழும்பில் உள்ள SLIIT சர்வதேச கம்பஸின் ஊடாக வழங்கவுள்ளது.

2020 உலக பல்கலைக்கழக கல்விசார் தரவரிசைப்படுத்தலில் Curtin பல்கலைக்கழகமானது உலகளவிலான பல்கலைக்கழகங்களில் உயர்ந்த ஒரு சதவீதத்துக்குள் காணப்படுவதுடன், இதன் மூலம் கணினி மற்றும் பொறியியல் பாடத்திட்டங்களை முழுமையாக இலங்கையில் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் உயர்ந்த தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகமாகவும் Curtin பல்கலைக்கழகம் அமைகிறது.

வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறைக்கான தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ளுடுஐஐவு-Curtin பல்கலைக்கழகத்துக்கு இடையிலான கூட்டாண்மை ஆரம்பமானது. இந்தக் கூட்டாண்மையின் ஊடாக தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான 1800ற்கும் மேற்பட்ட ஊக்கெழுச்சியுடைய, வளமான பட்டதாரிகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளனர்.

SLIIT ற்கும் Curtin பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கூட்டாண்மை இலங்கையின் உயர்கல்வியில் மிகவும் வெற்றிகரமான சர்வதேச கூட்டிணைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையானது SLIIT ற்கும் Curtin பல்கலைக்கழகத்துக்கும்; இடையில் காணப்படும் 20 வருட நீண்ட கூட்டாண்மைக்குப் புதிய அத்தியாயமாக அமையும்.

இலங்கை மாணவர்கள் தற்பொழுது Curtin பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் பொறியியல் பட்டங்களை கொழும்பில் உள்ள SLIIT சர்வதேச கம்பஸில் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும்.

அவுஸ்திரேலியாவில் உள்ள Curtin கம்பஸில் பெறக்கூடிய உயர்ந்த கல்வி அனுபவத்தை இங்கும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


SLIIT – Curtin கூட்டாண்மையானது இலங்கையின் உயர் கல்வியில் புதிய களத்தை உருவாக்குகிறது. உதாரணமாக, இயந்திர மின்னணுவியல் பொறியியல் (Mechatronic Engineering) இலங்கையில் முதல் தடவையாக வழங்கப்படும் புத்தாக்கமான பாடநெறியாக இது அமையும்.

விரைவாக முன்னேறிவரும் தன்னியக்கப் பயன்பாடுகள் காரணமாக இயந்திர, மின்னியல் மற்றும் கணினி பொறியியல் துறையில் நிபுணத்துவம் கொண்ட இயந்திர மின்னணுவியல் பொறியியலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இயந்திர மின்னணுவியல் பொறியியல் பட்டப் பாடநெறிக்கு சேரவிரும்பும் மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் 2021 மார்ச் 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

இந்த புத்தம் புதிய முழுமையான வளாகத்தில் அதிநவீன கல்வி உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் காணப்படுவதுடன், மாணவர்களின் கற்றலுக்கு மிகவும் உகந்த நவீன சூழலும் வழங்கப்படுகிறது.

புதிய முன்னேற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த SLIIT சர்வதேச கம்பஸின் பிரதி உபவேந்தர் கலாநிதி. அதுல பிடிகல-ஆராச்சி குறிப்பிடுகையில், “நாங்கள் Curtin உடன் பல ஆண்டுகளாக வலுவான மற்றும் வெற்றிகரமான உறவை அனுபவித்து வருகிறோம், Curtin பல்கலைக்கழகத்தின் பட்டப் பாடநெறிகளை முழுமையாக இலங்கையில் வழங்கும் வகையில் எமது கூட்டாண்மையை விஸ்தரிப்பது மற்றும் பலப்படுத்துவது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இலங்கையில் உள்ள ஒரு உண்மையான சர்வதேச வளாகத்தில் உலகளாவிய பல்கலைக்கழகத்தின் புத்தாக்கமான பட்டப்படிப்புகளைத் தொடர எங்கள் மாணவர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

மாணவர்களின் கற்றல் நடைமுறையை ஒருங்கிணைக்க உதவும் வகையில் அவர்களுக்கு தொழில்துறைகளில் உள்ளகப் பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்கள் விரும்பினால் உலகின் பல பகுதிகளில் உள்ள Curtin கிளை கம்பஸ்களில் தமது பட்டத்தைப் பூர்த்திசெய்வதற்காக மாற்றிக்கொள்ள முடியும்.

Curtin இன் கணினி மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அவுஸ்திரேலியாவின் கணினி சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய பொறியியலாளர்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடிவதுடன், உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தைப் பெறமுடியும்.

பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச சங்கம் (IAU) ஆகியவற்றில் SLIIT உறுப்பினராக இருப்பதால் பட்டதாரிகளுக்கு மேலும் அங்கீகாரம் கிடைக்கிறது.

SLIIT சர்வதேச கம்பஸினால் வழங்கப்படும் பல்கலைக்கழகத்தின் பட்டப் பாடநெறிகள் குறித்த மேலதிக தகவல்களைப் பெற தயவு செய்து iகெழ;ளடiவை.டம என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 011 7544801 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

 

Hot Topics

Related Articles