உலகம்

பெறுமதியான வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக கழகத்தை ஆரம்பிக்கும் Aaraa & Aati

இலங்கையின் உள்நாட்டு ஆடம்பர அணிகலன்களின் வர்த்தக நாமமான Aaraa & Aati ஆனது தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் பொருட்டு ‘A&A Exclusive Club’ என்ற பிரத்தியேக கழகத்தை தனது VIP உறுப்பினர்களுக்காக ஸ்தாபிக்கின்றது. இந்த பிரத்தியேக கழக அறிமுக நிகழ்வானது ஜனவரி 8 ஆம் திகதியன்று,  29B, மரைன் டிரைவ், கொழும்பு 3 இல் அமைந்துள்ள Aaraa & Aati இன் புத்தம் புதிய விற்பனையகத்தில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு மாநகரின் இதயப்பகுதியில் இந்த விற்பனையகமானது சிறியதாகவும், நவநாகரீகமாகவும், வசதியாகவும் அமையப்பெற்றுள்ளது. இதன் சகல ஆலோசனை வழங்கல்களும் உயர் தரமானவையென்பதுடன்,  முற்பதிவின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள்  இணையத்தளம் / துரித அழைப்பின் மூலம் முற்பதிவு செய்த பின்னர் நேரடியாக வருகை தந்து Aaraa & Aari ஊடாக தமது கனவுகளை நனவாக்கிக்கொள்ள முடியும்.

இதில் அற்புதமான விடயம் என்னவென்றால், அணிகலன்கள் மற்றும் வடிவமைப்பு பற்றி கலந்துரையாடுதலில் இருந்து, தனித்துவமான தலைசிறந்த படைப்புக்களைக் கொண்டு வருவது வரை, வாடிக்கையாளர்கள் முழு செயன்முறையிலும் பங்கு வகிக்க முடியுமென்பதாகும்.

Aaraa & Aari ஆனது உலகத் தரமிக்க, சட்டத்திட்டங்களுக்கு அமைவாகப் பெறப்பட்ட மாணிக்கக் கற்களை மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்வதிலும், அப்பழுக்கற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட திருமண மற்றும் நிச்சயதார்த்த மோதிரங்களை அதியுச்சபட்ச நேர்த்தியுடன் வழங்குவதிலும் பல வருட துறைசார் அனுபவத்தைக் கொண்டுள்ளது. பிரத்தியேகமான சொகுசு அனுபவங்களைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் குறிக்கோளுடன், Aaraa & Aari இன் exclusive club ஆனது தனித்துவமான அனுபவங்கள், வெகுமதிகள், விசுவாச திட்டங்கள், பிரத்தியேக திட்டங்கள், மற்றும் பலவற்றை ஒருங்கிணைத்துள்ளது.

Aaraa & Aari ஆனது உலகத் தரமிக்க, சட்டத்திட்டங்களுக்கு அமைவாகப் பெறப்பட்ட மாணிக்கக் கற்களை மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்வதிலும், அப்பழுக்கற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட திருமண மற்றும் நிச்சயதார்த்த மோதிரங்களை அதியுச்சபட்ச நேர்த்தியுடன் வழங்குவதிலும் பல வருட துறைசார் அனுபவத்தைக் கொண்டுள்ளது. பிரத்தியேகமான சொகுசு அனுபவங்களைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் குறிக்கோளுடன், Aaraa & Aari இன் exclusive club ஆனது தனித்துவமான அனுபவங்கள், வெகுமதிகள், விசுவாச திட்டங்கள், பிரத்தியேக திட்டங்கள், மற்றும் பலவற்றை ஒருங்கிணைத்துள்ளது.

“எமது முதன்மை நோக்கமானது, தமக்கு தேவையானதும் விருப்பமானதுமான அணிகலன்களூடாக மக்களை இணைத்தலாகும். இந்த ஆ & ஆ பிரத்தியேகக் கழகமானது நட்பை உருவாக்கவும், யோசனைகளையும் ஆர்வங்களையும் பகிரவும் துணை புரிகின்ற விசேட சூழலை உருவாக்குகின்றது.

வலையமைப்பு வாய்ப்புக்கள்,  சமூக நிகழ்வுகள் மூலம் சமூகம், இணைப்பு, இணைந்து பணியாற்றுதல் முதலிய உணர்வுகளை கட்டியெழுப்பப்படக்கூடிய  மிகச்சிறந்த தளமாக இது விளங்குகின்றது. எமது வாடிக்கையாளர்கள் குறிப்பிடத்தக்க பங்கை இவ்வளவு தூரம் எமது பயணத்தில் வகித்திருப்பதுடன், இந்த புதிய முயற்சியானது அவர்களது விசுவாசத்தைக் கௌரவிப்பதற்கான எமது தாழ்மையான வழிமுறையாகும்,”  என Aaraa & Aati இன் இணைப் பணிப்பாளர்ஃபஹ்மி ரஹ்மான் கருத்துத் தெரிவித்தார்.

ஏனைய வியாபாரங்களைப் போல Aaraa & Aati உம் தொற்றுநோயினால் ஏற்பட்ட புதிய இயல்பு நிலைமைக்கு தன்னை இசைவாக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன்போது முகாமைத்துவமானது சோதனைக்குட்படுத்தப்பட்ட போதிலும், நிறுவனம் இதை முன்னோக்கி செல்லும் பாதையை பிரதிபலிக்கும் வாய்ப்பாகக் கண்டது, விடாமுயற்சி மற்றும் தெய்வீக தலையீட்டால் புயலைக் கடக்க முடிந்தது. இக்காலப்பகுதியில், அனைத்து வாடிக்கையாளர்களும் ஆபரணங்கள் தொடர்பான ஆலோசனைகளுக்கு ஒன்லைன் அலைவரிசைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டதுடன், வாடிக்கையாளர்களால் அவர்களது வீட்டில் இருந்தவாறே சேவையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

மேலும், தொற்றுநோய்க் காலத்தில் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட Aaraa & Aati இன் பணத்துக்கேற்ற பெறுமதியை வழங்கும் ‘Surf Collection’, இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையானது நிறுவனம் தனது பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதுடன், முடக்கல் நிலையிலும் கூட, அவர்களின் சிறப்பான தருணங்களை வீட்டிலேயே கொண்டாட உதவியது.

தற்போது சிங்கப்பூரில் உள்ள தனது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு  அங்கும் Aaraa & Aati கால்பதித்துள்ளது. ஆடம்பர வாடிக்கையாளர் அனுபவத்தை உண்மையில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதே இந்த ஆண்டிற்கான திட்டமாகும். கொழும்பு மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் அற்புதமான வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை வழங்கும் அதேவேளை ஆபரணத் தொழிற்துறையில் ஒரு முக்கிய அளவீட்டை நிர்ணயிக்க Aaraa & Aati எதிர்பார்த்துள்ளது.

மேலதிக விபரங்களை 0770218384 என்ற இலக்கத்தின் ஊடாகவோ அல்லது www.aaraa-aati.com என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.

Hot Topics

Related Articles