இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த நார் இரு பெண்களையும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதலாவது பெண்ணை சந்தித்து ஒரு மாதத்தின் பின் இரண்டாவது பெண்ணை சந்தித்துள்ளார் குறித்த நபர்.
24 வயதான குறித்த விவசாயி, 20 மற்றும் 21 வயதுடைய இரு பெண்களையே இவ்வாறு மணம் முடித்துள்ளார்.
இரண்டு பெண்களும் உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் ஒன்றாக வாழவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனினும் மூவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
அந்த வாழ்ககை திருப்தியாக இருந்ததையடுத்து திருமணம செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
மூவருக்கும் ஜனவரி 5ஆம் திகதி 500க்கும் மேற்பட்டோர் உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
இரு பெண்களையும் ஏமாற்றவிரும்பாததால் இருவரையும் திருமணம் செய்து கொண்டதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
இப்போது அவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மூவரும் தொடர்ந்து விவசாயிகளாக இணைந்து பணியாற்றி மகிழ்ச்சியுடன் வாழவும் முடிவு செய்துள்ளனதாக தெரிவித்தனர்.