உலகம்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! சடலங்கள் தகனம் தொடர்பில் மாறாத நிலைப்பாட்டில் அரசு

இலங்கையில் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுகாதார அமைச்சு தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் இது குறித்த பேசிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, கொரோனா நோய்த்தொற்றால் இறக்கும் நபர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற வைராலஜிஸ்டின் பரிந்துரைகள் அதே முறையில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்கு தொடர்பில் விசாரிக்கும் பிரதான குழுவிற்கு, நிபுணர்கள் அளித்த பரிந்துரைகள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் இலங்கை மருத்துவ சங்கம் கொரோனா அடக்கம் செய்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இதேவேளை இலங்கையில் நேற்று 532 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 03 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன.

மினுவங்கோடா – பெலியகொடை கொத்தணியுடன் தொடர்புகளாக 432 பேருக்கும் சிறைச்சாலைகளில் 93 பேருக்கும் வெளிநாட்டுகளில் இருந்து வருகைதந்த 07 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 46,780 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இலங்கையில் 638 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,661 ஆக உயர்வடைந்துள்ளது.

COVID-19 மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 39,661 ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட 638 நபர்கள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், நான்கு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 6,893 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள 66 கொரோான சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 53, 63, 89 ஆகிய வயதுகளை உடை மூவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இலங்கையின் இறப்பு எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

Hot Topics

Related Articles