உலகம்

41 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக கதாநாயகனாகும் செந்தில்!

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட்ட பெறுமை கவுண்டமணி செந்தில் ஜோடியையே சாரும்.

எனினும் நாற்பத்தி ஒரு வருடமாக வலம் வந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு இப்போது தான் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் செந்தில் பெயரில் போலிக் கணக்கு! | comedian senthil does not have  twitter account | nakkheeran
இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமா மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து நடிக்கும் செந்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க உள்ள திரைப்படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்க உள்ளாராம்.

இவர் விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியவர் ஆவார்.
மேலும் இந்த படத்தில் செந்திலுக்கு ஆயுள் தண்டனை கைதி வேடம் எனவும் இவருக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

செந்தில் மகன் திருமணம்- கவுண்டமணி தலைமை | Actor Senthil's son to marry  Madurai girl - Tamil Filmibeat
இதேவேளை செந்தில் கடந்த 2007ஆம் ஆண்டில் ஆதிவாசியும் அதிசய பேசியும் என்ற வித்தியாசமான கதைக்களத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது.

Hot Topics

Related Articles