வயதாகிறது என கவலையைா? இதோ நீண்ட காலத்துக்கு இளமையை தக்க வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்

எமக்கு உள்ள மிக்க பெரிய கவலைகளில் ஒன்று வயதாவது, வயதாகும் போது ஏற்படும் உடல் உள ரீதியான மாற்றங்கள் பொதுவானவை தான். எனினும் அக்கறையுடன் செயற்படுவதன் மூலம் இதனை தள்ளிப்போட முடியும்.

பிரன்ஸ் மக்களை, மிகவும் ரொமான்டிக்கானவர்கள் என்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள், வயதாவதால், நம் வாழ்வு அவ்வளவுதான் என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலாமல், வயது என்பது, அவர்களின் அனுபவத்தின் அளவு என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது தான்.

எண்பது தொண்ணூறு வயதுகளில்கூட, காதலில் ஈடுபடுவதும், அவர்களின் நீடித்த உற்சாகமான வாழ்க்கைக்கு, சான்றாக விளங்குகிறது.

வாயதாகின்ற போது தமது தோற்றத்தை தக்கவைத்து கொள்ள பலவிதமான சிகிச்சைகள் இருந்த போதும் அதனை செய்து கொள்ள வசதியானவர்களுக்கே வாய்ப்புகள் கிடைக்கின்றது.

எனினும் ஆரோக்கியமான உடற்பயிற்சி மற்றும் போசாக்கான உணவுகளை அன்றாடம் சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ளவதன் மூலமாக அனைவரும் இதனை சாத்தியமாக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கும், உடல் வயதாவதற்கும் சம்பந்தம் இல்லை.

எமது இளமையை நீண்ட காலத்துக்கு தக்கவைத்துக்கொள்ளவதில் உணவுபழக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்தவகையில் 50 வயது கடந்தாலும் உங்கள் அழகும் உற்சாமும் அப்படியே இருக்க வேண்டும் என்றால் நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

இதற்கமைய வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
3கால்சியம் சத்துணவு.

உடலில் தசைகள், இதய இரத்தநாளங்கள் இவற்றின் இயக்கத்திற்கு, கால்சியம் முக்கியமானது, உடலில் கால்சியம் குறையும்போது, எலும்புகளிலுள்ள கால்சியத்தை உடல் எடுத்துக்கொள்கின்றது.

இதனால் கைகால் உடலில் தளர்ச்சி மற்றும் வலி ஏற்படும். இதைத் தவிர்க்க, உடலில் கால்சியத்தை சீராக பராமரிக்க வேண்டும்.

கால்சியம் நிறைந்த பசலைக்கீரை, பிரக்கோலி, பாதாம் போன்ற பருப்புகளை உணவில் சேர்க்கவேண்டும். பால், உற்பத்திகள் கால்சிய தேவையை பூர்த்தி செய்யும்.

விட்டமின் D உணவு.
வயதாவதால் ஏற்படும் வியாதிகளுக்கு வைட்டமின் D குறைபாடு காரணமாகிறது.
காலை வேளைகளில் சூரிய ஒளி உடலில் படும்படி சற்றுநேரம் இருந்தாலே, ஒரு நாளுக்கு தேவையான விட்டமின் Dகிடைத்து விடும்.
இது தவிர சீஸ் எனும் பாலாடைக்கட்டி, சோயா பானம், ஆரஞ்சு பழச்சாறு, சாலமன் மற்றும் துனா வகை மீன்களில் விட்டமின் Dஅதிகமுள்ளது.

விட்டமின் B12 உணவுகள்.
கொபாலமின் எனும் விட்டமின் B12, உடலில் வளர்சிதைமாற்றம் சீராக நடைபெறவும், உடல் இயக்க மூளை செயல்பாடுகள் மற்றும் புதிய செல்கள் உருவாக்கத்தில், முக்கிய பங்கு வகிக்கின்றது.

கம்பு, சோயா உள்ளிட்ட தானியங்கள், சீஸ், பால், முட்டை மற்றும் மீன் உணவுகளை தினம் தோரும் சாப்பிட்டு வந்தால் விட்டமின் B12 ஐ பெற்றுக்கொள்ள முடியும்.

மக்னீசியம் உணவுகள்.

உடலில் இரத்த நாளங்களில் அடைப்பு, இரத்த அழுத்த பாதிப்பு, தசை இதய இயக்கங்களை வலுவாக்குதலல் போன்றவற்றில் மக்னீசியம் உதவுகின்றது.

இது குறையும்போது, இதய பாதிப்புகள், இரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்புகள் அதிகரிக்கும். கீரைகள், பீன்ஸ், சோயா, பாதாம், முந்திரி, நிலக்கடலை, எள் விதைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைந்துள்ளன.

ஆயினும் பெண்கள், தேவைக்கதிகமாக மக்னீசிய உணவுகளை சாப்பிடக்கூடாது.

பொட்டாசியம் உணவுகள்.

பெண்களின் பக்கவாதம் போன்ற வாத பாதிப்புகளைத் தவிர்ப்பதில், பொட்டாசியம் உறுதுணையாகிறது. துவரம்பருப்பு, பீன்ஸ், வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் இவற்றில் பொட்டாசியம் உள்ளது.

மக்னீசியத்தைப்போல, பொட்டாசிய உணவுகளையும் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒமேகா 3 உணவுகள்
உடலின் செயல்பாட்டுக்கும், மூளையின் இயக்கத்துக்கும், எலும்புகளின் வலுவிற்கும், ஒமேகா 3 கொழுப்பு காரணமாகிறது.
கீரைகள், ஆளிவிதைகள், சோயா விதைகள், பாதாம் மற்றும் மீன்களில், இந்தச் சத்து மிகுந்துள்ளது.

ப்ரோ பயாடிக் உணவுகள்.
சிறந்த செரிமானத்துக்கும் குடல் வளத்துக்கும், ப்ரோபயாடிக் உணவுகள் இன்றியமையாதவை.

தயிர், கெஃபிர், சோயா போன்றவை, சில ப்ரோ பயாடிக் உணவுகள் ஆகும்
குறிப்பாக ஐம்பதைக் கடக்கும் பெண்கள், இவ் உணவுகனை அவசியம் சேர்த்துக் கொள்வதால் உடலை ஆரோக்கியமாக்கி, மனதை வலுவாக வைத்துக்கொள்ள முடியும்.

50ஐ நெருங்கும் காலகட்டத்தில், உடலின் வளர்சிதைமாற்றம், தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கும். இவற்றை, மேற்கண்ட உணவு வகைகள் சரிசெய்கின்றன.

காலையில் சாப்பிடும் உணவு, உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, உடல் வளர்ச்சியை வலுவாக்கும். இரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். பசிக்காக மட்டும் உண்ணாமல் நமது உடலின் தேவை அறிந்து உணவை உற்கொள்வது இதில் மிக முக்கியமானது.

மன அழுத்தம், படபடப்பு போன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, மூச்சி பயிற்சி மற்றும் இயற்கையை எழில் நிறைந்த இடங்களுக்கு செல்வது போன்றன உதவும்.

புதிய மொழி, நீச்சல், இசைக்கருவிகள், தற்காப்புக்கலை போன்ற புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமும், உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

அத்தோடு குறுகிய காலத்தில் அடையக்கூடிய ஒரு இலக்கை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், வாழ்வை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து, இலக்கை அடையும் சிந்தனையுடன் வாழ முடியும்.

Hot Topics

பிளாக் டீ , கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles

பிளாக் டீ , கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...