சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து இன்றுடன் ஒரு மாதம் – பிணை கோரியுள்ள ஹேமந்த்

சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து இன்றுடன் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரின் தற்கொலை வழக்கு அவரின் தாயாரின் வேண்டுகோளின் பேரில் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சித்ரைாவின் கணவர் ஹேமந்த் பிணை கோரி தாக்கல் செய்த மணு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நடிகை சித்ராவின் கன்னத்தில் நகக்கீறல் வந்தது எப்படி? | pandian stores actress vj chitra suicide - police investigation her huband hemanth– News18 Tamil
இந்தியாவின், திருவான்மியூரை சேர்ந்த சித்ரா சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நிலையில், ஹோட்டல் அறையில் தூக்கிட்டு கொண்டதையடுத்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதன் போது சித்ராவின் கணவர் ஹேமனந்த் உடன் இருந்தார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ஹேமந்த்தை கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி | pandiyan stores chitra suicide - hindutamil.in
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஹேமந்த் சித்ராவை திரைப்படங்களில் நடிக்ககூடாதென கூறி வற்புறுத்தியதாகவும், சக நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை வைத்து சந்தேகித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சித்ரா தனது உறவினரிடம் தொலைப்பேசியில் பகிர்ந்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார், அவ் குறல் பதிவகள் ஹேமந்தினால் அளிக்கப்பட்ட போதும் அதனை மீட்டு அதன் அடிப்படையில் ஹேமந்த்தை கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த்தை சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவ சீட்டுகளை வாங்கித்தருவதாக கூறி 1 கோடியே 50 லட்ச இந்திய ரூபாய் மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர்.

சீரியல் நடிகை சித்ராவின் பேஸ்புக் பக்கம் திடீர் முடக்கம் - கவனம் பெறும் கடைசி பதிவு | vijay tv pandian stores actress vj chitra facebook account colosed– News18 Tamil
இந்நிலையில், சித்ராவின் கணவர் ஹேமந்த் சித்தரா தொடர்பான வழக்கில் பிணைக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மனுவில், திரைப்படங்களில் நடிக்ககூடாதென கூறியதால் தான் தன் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என வாதிட்டுள்ளார்.

சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை: தீவிரமாகும் விசாரணை!
சித்ரா தனது குடும்பத்துடன் மகளை போல நெருங்கி பழகி வந்தார். அது சித்ராவின் தாயாருக்கு பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே சித்ராவின் தாயாருக்கு தமது திருமணத்தில் உடன்பாடில்லை. எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கும் சித்ராவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எந்த குற்றமும் தான் இழைக்கவில்லை ஆகையால் பிணை வழங்க வேண்டும் என அந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் ஹேமந்த்தின் பிணை கோரிக்கைக்கு எதிராக சித்ராவின் தயார் வழக்கு தொடர போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் அவரின் வேண்டு கோளின் பேரில் இந்த வழக்கு மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றபட்டுள்ளதால், வழக்கின் எதிர் மனு தாரராக மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதிக்கு முன் ஹேமந்த்தின் பிணை கோரிக்கைக்கு பதிலளிக்கவும் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles