உலகம்

உலகின் முதலாவது இரட்டை அடுக்கு சரக்கு ரயில் சேவை இந்தியாவில் தொடங்கி வைப்பு!

உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரயில் சேவை இந்தியாவில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

1.5 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து திறந்து வைத்துள்ளார்.

தலைநகர் டில்லியை, நவிமும்பையுடன் இணைக்கும் வகையில் 1,483 கி.மீ. நீளம் கொண்ட மேற்கு சரக்கு ரயில்பாதை திட்டத்தை இந்திய ரயில்வே திணைக்களம் செயற்படுத்துகின்றது.

இதன் ஒரு அங்கமாக 306 கி.மீ. தொலைவு தூர மின்மயமாக்கப்பட்ட சரக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரெயில்பாதை, அரியானாவில் 79 கி.மீ., ராஜஸ்தானில் 227 கி.மீ. தூரத்தைக் கொண்டுள்ளது.

இதன்மூலம் அரியானாவின் ரேவாரி, மானேசர், நர்னால், புலேரா, கிஷன்கார் பகுதியில் உள்ள பல்வேறு தொழில்கள் பலன்பெறும். ராஜஸ்தான் மாநிலமும் பலன் அடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles