உலகம்

வீட்டுக்கு தாமதமாக வந்த கணவருக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், வேளை முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்த கணவரின் முகத்தில் மனைவி கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கணவர் தினமும் வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வருவதால் இரவு நேரங்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு முன்தினம் வழமைப் போல் தாமதமாக வந்த கணவருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. எனினும் பெற்றோர் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து இருவரும் அமைதியாக உறங்க சென்றுள்ளனர்.

எனினும் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த மனைவி அதிகாலை வரை தூங்காமல் விழித்திருந்ததுடன் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, மனைவி தனது வன்முறைச் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காரப்பூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles