புடினின் புத்தாண்டு செய்தியை பிழையாக ஒளிப்பரப்பிய தொலைக்காட்சி சேவைக்கு தண்டனை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புத்தாண்டு செய்தியை, தலையில் பாதி துண்டிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியமைக்காக கலினின்கிராட் சார்ந்த தொலைக்காட்சி சேவைக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு தொழில்நுட்ப குறைபாடு எனவும் அரசியல் எதிர்ப்பு அல்ல என்றும் குறித்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன் தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Russian President Vladimir Putin's head was cut off by Kaliningrad-based station Kaskad TV

ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி நள்ளிரவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாரம்பரியமாக ஒளிபரப்பப்படுகிறது, மேலும் பிரித்தானியா ராணியின் கிறிஸ்துமஸ் தின செய்திக்கு ஒத்த அந்தஸ்து இதற்கு வழங்கப்படுகின்றது.

இதன் போது, கஸ்காஸ் தொலைக்காட்சியில் உள்ள ஆசிரியர்கள் பிழையை உணர்ந்து தொலைக்காட்சி மற்றும் இணையம் இரண்டிலும் ஒளிபரப்பை நிறுத்தி, அதை மாற்றியுள்ளனர்.

A screenshot of Putin's address from the Kremlin on New Year's Eve

எனினும், இதனைப் பார்த்து திகைத்துப்போன குடியிருப்பாளர்கள் இவ்வாறு ஒளிபரப்பப்பட்ட ஜனாதிபதியின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கஸ்காஸ் ஊடக குழுமம் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Hot Topics

Related Articles