உலகம்

டாமினிக் என்று பெயர் சூட்டியதால், பிறக்கும் போதே லட்சக்கணக்கில் பரிசு வென்ற குழந்தை!

அவுஸ்திரேலியா உள்ள டோமினோஸ் நிறுவனம் தமது 60 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, டிசம்பர் 9 ஆம் திகதி ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதலாவது குழந்தைக்கு 60 ஆண்டுகளுக்கு அந்த பிட்சா இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

ஆனால் குறித்த திகதியில் பிறக்கும் குழந்தை, ஆண் எனில் டொமினிக் என்றும் பெண் எனில் டொமினிக்யூ எனவும் பெயர் சூட்ட வேண்டும் என நிபந்தனை வித்திதுள்ளது.

இதன்படி சிட்னியைச் சேர்ந்த தம்பதியினரான தங்கள் முதல் குழந்தையை அன்றைய நாளில் ஈன்றெடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.

முதலில் இந்த தம்பதியினருக்கு இப்படி ஒரு போட்டி நடப்பதே தெரியாத நிலையில் கடந்த வருடம் டிசம்பர் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று சரியாக அதிகாலை 1.47 மணிக்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு உறவினர் மூலம் போட்டி குறித்து அறிந்துள்ளனர்.

எனினும் அவர்கள் குழந்தை 08 ஆம் திகதியே பிறந்து விடுவான் என்று நினைத்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக 09 ஆம் திகதி அதிகாலை 1.47 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது.

Dominic Julian Lot was born at 1.47am that day to Clementine Oldfield and Anthony Lot after a 72-hour labour at Royal Prince Alfred Hospital
எனவே உடனே அந்த போட்டியில் பங்கு கொள்ள அவர்கள் தங்கள் மகனுக்கு டோமினிக் என்ற பெயரையும் சூட்டி பிறப்புச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்து உள்ளனர்.

இதனையடுத்து போட்டியில் வெற்றிப்பெற்ற அவர்களுக்கு, அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா வழங்குவதற்கான பணத்தை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஒரு பீட்சாவின் விலை 14 டாலர் ஆகும்.

எனவே மொத்தமாக சேர்த்து 60 வருடத்திற்கு கிட்டத்தட்ட 10,080 ஆஸ்திரேலியா டாலரை டோமினோஸ் நிறுவனம் அந்த தம்பதியினருக்கு வழங்கியுள்ளது.

பிறக்கும் போதே அவர்களுடைய மகன் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்த தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Hot Topics

Related Articles