நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம் – நடிகர் விஜய்க்கு வைத்தியரின் உருக்கமான பதிவு!

மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்தது.

நடிகர் விஜயின் வேண்டுகோளை அடுத்தே தமிழக அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதனை கண்டித்து நடிகர் விஜய்க்கு வைத்தியர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது முகபுத்தகத்தில் பதிவென்றை வைத்துள்ளார்.

அவரின் இந்த உருக்கமான பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வைத்தியர் அரவிந்த்தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம்.

என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான வைத்தயர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

இந்த நோய் பரவல் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை.

எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை.

ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

கொரோனா தொற்று நெருக்கடி இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை, சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.

உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை.

நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று தெரிவி்த்துள்ளார்.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தமைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திரையுலகை சேர்ந்த அரவிந்த்சாமி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles